திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வைரமுத்து. ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு படம் உண்டு. அது.. பிரவின் காந்தி இயக்கிய ஜோடி திரைப்படம்.
இந்த அனுபவத்தை அவர் தெரிவித்தபோது, “அந்த படத்தில் ‘காதல் கடிதம் தீட்டவே..’ என்ற பாடல் வரும். அதற்கு முந்திய காட்சியில், பிரசாந்த் தன் காதலுக்காக வைரமுத்துவிடம் டிப்ஸ் கேட்கும் சீன் உண்டு.
இதில் வைரமுத்து நடிக்க வேண்டும் என நினைத்தேன். அவர் மறுத்தார். நான் மிகவும் வற்புறுத்திய பிறகு மிகச் சில நிமிடங்கள் வரும் அந்த காட்சியில் நடித்தார்” என்ற பிரவின் காந்தி, “படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தின் வைரமுத்துவை நடிக்க வைக்க வைரமுத்துவிற்கான சம்பளத்தை என் சம்பளத்தில் கழிக்க சொல்லிவிட்டேன்” என்றும் கூறினார்.