பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படம், கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது ‘தங்கலான்’ படத்தினை ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் படப்பிடிப்பு துவங்கி முடியும் போது100 கோடி ரூபாயை படத்தின் பட்ஜெட் தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல், மதுரை, கேஜிஎப் ஆகிய பகுதிகளில் நடந்த ‘தங்கலான்’ பட ஷுட்டிங் அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது.