Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரஜினிக்கு பிடித்த லொகேஷன் எது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழின் நம்பர் 1 நடிகராக – சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினியின் எளிமை அனைவரும் அறிந்ததுதான். கேரவேன் என்பது வரும் முன்பு, படப்பிடிப்பின் இடை வேளையில், மரத்தடியிலேயே படுத்து ஓவ்வெடுப்பார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதே நேரம் அவருக்கு மிகப் பிடித்த இடம்   ஒன்று உண்டு. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார்.  சுற்றி வந்திருக்கிறார்.

ஆனால் இன்றளவும் அவருக்கு மிகப் பிடித்த ஊர் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி.. அதுவும் அங்குள்ள நைன்த் மைல் சூட்டிங் மேடு என்கிற பகுதிதான்.  இங்குதான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல படங்களின் படப்பிடிப்பு.. குறிப்பாக பாடல் காட்சிகள் எடுக்கப்படும்.

இந்த பகுதியில் படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளும்போது, ஷூட்டிங் இடைவேளையின் போது, அப்படியே புல் தரையில் படுத்து விடுவாராம்.  படக்குழுவினர் பதறிப்போய் கேட்டால், “அட.. உலகிலேயே அருமையான இடம்  இந்த பகுதிதான்.. “ என்பாராம்.

சமீபத்தில் தயாரிப்பு நிர்வாகி  ஒருவர் பேட்டியின் போது தெரிவித்த தகவல் இது.

ரஜினியின் ஸ்டைல், பஞ்ச் டயலாக்குகள் மட்டுமல்ல.. அவரது ரசிப்பும் தனி ரகம்தான்!

- Advertisement -

Read more

Local News