Wednesday, April 10, 2024

இயக்குனர் ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ புதிய அப்டேட்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரம்மாண்ட  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  உருவாகிவரும் திரைப்படம் ’கேம் சேஞ்சர்’ இந்த படத்தில் நாயகனாக ராம் சரண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.மேலும் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி,அஞ்சலி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப  கோளாறு காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்த படம் பற்றி புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.இதில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராம் சரண் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News