Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

அஜித்- பிரசாந்த் நேரடி மோதலா!: நடந்தது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர்கள் அஜித் – பிரசாந்த் இடையே மோதல் நடந்ததாக நீண்ட காலமாகவே ஒரு தகவல் உலவி வருகிறது.  இருவருமே இது குறித்து பேசாத நிலையில், இயக்குநர் சரண் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார்.

அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம். கல்லூரி வாசல்   ஆகிய படங்களை இயக்கியவர் சரண். இதில் கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த்தும் நடித்தார்.

தற்போது இயக்குநர் சரண், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் ஷாலினி திருமணம் முடிவானபோது ஷாலினி பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படம் பாதியில் இருக்கும்போதே ஷாலினி அஜித்தை திருமணம் செய்துகொண்டார். அதனால் அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு ஷாலினி பங்கேற்க சற்று தாமதமாகிவிட்டது. அதை வைத்து அஜித்துக்கும் பிரஷாந்துக்கும் மோதல் என்று வதந்தி பரப்பி விட்டுவிட்டார்கள்.

மற்றபடி இருவருக்கிடையே மோதல் என்பது நடக்காத ஒன்று. இருவருமே அன்பாகத்தான் பழகினார்கள். மேலும், அப்படியான ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரசாந்த் நடித்த ஒரு படத்தைக் கூட அஜித் பார்த்திருக்க மாட்டார். ஆனால், பிரஷாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தை தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து பார்த்தார்” என சரண் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News