Touring Talkies
100% Cinema

Tuesday, August 26, 2025

Touring Talkies

‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த இயக்குனர் பேரரசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1991 ஆம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு நாளில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இசைஞானி இளையராஜாவின் சக்திவாய்ந்த இசையுடன், விஜயகாந்த், சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இன்றும் பலரும் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் மன்சூர் அலி கான், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கிற்கு சென்று ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பார்த்தனர்.

அப்போது, ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடல் வந்தபோது, மன்சூர் அலி கான் மற்றும் பேரரசு இணைந்து நடனமாடினர். அந்தக் காட்சி படம்பிடிக்கப்பட்டு, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், திரைப்படத்தை பார்த்துவிட்டு, ஆர்.கே. செல்வமணி, மன்சூர் அலி கான், பேரரசு உள்ளிட்டோர் சேர்ந்து கேக் வெட்டி, விஜயகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

- Advertisement -

Read more

Local News