பொன்னியின் செல்வன், யாத்திசை பார்க்கவே மாட்டேன்! : இயக்குநர் லெனின் பாரதி  

இயற்கை சார்ந்து யதார்த்த வாழ்க்கையோடு மனிதர்களின் நிஜ வாழ்க்கை கதையாக மேற்குத் தொடர்ச்சி மலை படத்தை இயக்கினார்  லெனின் பாரதி.  இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “எனது அடுத்த  அந்த படமும் சாமானியர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டதாகவே  இருக்கும்.

கேரளா ஸ்டோடரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தினர். ஆனால், நீதிமன்றத்தில் இது கற்பனை கதை என்று தான் வாதாடி படத்தையே வெளியிட்டனர். அதனால், அதை பார்க்க எனக்கு உடன்பாடு இல்லை.

அதே போல யாத்திசை, பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று புனைவு படங்களையும் பார்க்கவில்லை.மன்னர் காலத்து படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. தவிர அந்த படங்களை பார்க்க நேரமும் இல்லை” என்று அதிரடியாக கூறினார்.