ஒரு திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும், படத்தை இயக்குவதிலும் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதற்கு இயக்குநரும், கதாசிரியருமான கரு.பழனியப்பன் ஒரு அழகான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார்.
“நம்ம தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் கேட்டிருக்கும் கதை ‘பாட்டி வடை சுட்ட கதை’தான். இதை எழுத்தில் படிக்கும்வரையில் பிரச்சினையில்லை.
ஆனால், இந்தக் கதையை ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டுமென்று ஒரு இயக்குநர் நினைத்தால் அவன் மனதில் பல கேள்விகள் தோன்றும்.
அந்த பாட்டிக்கு என்ன வயதிருக்கும்.. சுமங்கலியா..? அமங்கலியா..? நடக்க முடியுமா..? முடியாதா..? பேச முடியுமா..? முடியாதா..?
அவங்க சுடுற வடை என்ன வடை..? உளுந்த வடையா..? ஆமை வடையா..?
அவங்க என்ன அடு்ப்பு பயன்படுத்துவாங்க..? மண் அடுப்பா..? ஸ்டவ் அடுப்பா..? கேஸ் அடுப்பா..? எத்தனை அடுப்புகள் பயன்படுத்துவாங்க..?
எப்படி வடை சுடுறது..? சட்டில அப்படியே கண் முன்னாடியே சுட்டு வைக்கணுமா..? இல்லை… வடையை வைச்சிருக்குற மாதிரியே காட்டணுமா..?
இத்தனை கேள்வியும் ஒருவனுக்கு எழுந்தால் அவன்தான் இயக்குநர். இந்தக் கேள்விகளுக்கான விடையைத்தான் அவன் கதை, திரைக்கதை, வசனமாக எழுத வேண்டும்..” என்று அழகாக விளக்கவுரையைக் கூறியிருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.