பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்திரி பலருக்கும் உதவி செய்திருக்கிறார். அதே நேரம் தனது இறுதிக்காலத்தில் மிகவும் நொடித்துப் போயிருந்தார்.
இது குறித்து பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் பதிவு செய்திருக்கிறார்.
பாக்யராஜ் சினிமாவுக்கு வந்த புதிது. படப்பிடிப்பின்போது, இயக்குனர் பாலகுரு சாவித்திரியை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.
திரையில் மட்டுமே பார்த்த சாவித்திரியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் பாக்யராஜ் சென்றார்.
கதவை தட்டியபோது எஸ் என்ற சத்தம் மட்டும் கேட்டுள்ளது. கதவு திறந்து உள்ளே சென்று பார்த்தால், திரையில் பார்த்து சாவித்தியா இது என்று அதிர்ச்சியடைந்துவிட்டார் பாக்யராஜ்.
இரு கன்னங்களும் வற்றிப்போய் ஒல்லியான ஒருவத்துடன் இருந்த சாவித்திரியைப் பார்த்து பார்த்து கதறி அழுதுள்ளார்.
சாவித்தி “ஏம்பா அழறே” என்று கேட்க “உங்களைத் திரைப்படத்தில் அப்படி பார்த்திருக்கிறேன். இப்போ இப்படி பார்க்க வேதனையாக இருக்குமா.. அதான் அழுகை வந்து விட்டது” என்றார்.
சிறு புன்னகையுடன் சாவித்திரி, “ஷாட்டுக்கு வரச் சொன்னார்களா” என்று இயல்பாக கேட்டு வந்திருக்கிறார்.
அதிர்ச்சியில் உறைந்துவிட்ட பாக்யராஜ், “சினிமா மீதிருந்த பிரமிப்பே உடைந்து விட்டது” என்று தன்னுடைய அனுபவத்தை எழுதியுள்ளார்