Thursday, April 11, 2024

தயாரிப்பாளரை அடித்து விரட்டிய இயக்குநர் பாலா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிதாமகன்’ படத்தின் தயாரிப்பாளரான வி.ஏ.துரையை அந்தப் படத்தின் இயக்குநரான பாலாவின் அலுவலகத்திலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர். இந்தக் கொடுமை நேற்றைக்கு நடந்துள்ளது.

விக்ரம் – சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘பிதாமகன்’ படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை தயாரித்திருந்தார். அந்தப் படத்தை பாலா இயக்கினார்.

‘பிதாமகன்’ வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது. அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு அப்போதே 25 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்திருந்தாராம்.

ஆனால், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு நேற்று தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் பாலாவின் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று ஒரு நாள் முழுவதும் பாலா அலுவலகத்தில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இரவு 10 மணி ஆன போதும் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் பாலா அலுவலக ஊழியர்கள் வி.ஏ.துரையை அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இந்தப் பிரச்சனையை விரைவில் முடித்துக் கொடுப்பதாக தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் பாலா அலுவலகத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News