Touring Talkies
100% Cinema

Saturday, March 22, 2025

Touring Talkies

தனது அடுத்தப் படங்கள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, இதற்கு முன்பு ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் கதாநாயகியாக அறிமுகமான கயாது லோஹர் இந்தப் படம் மூலம் பெரிதும் பிரபலமானார். மேலும், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை மற்றும் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் மனதுக்கு ஏற்பாக இருந்ததினால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இப்படத்தை கொண்டாடினர். தற்போதுவரை இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிராகன் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே, ‘காட் ஆப் லவ்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள புதிய ஒரு திரைப்படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அறிவித்திருந்தார். டிராகன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அந்தப் புதிய படத்தின் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, அஷ்வத் மாரிமுத்து தொடர்ந்து மூன்று புதிய படங்களை இயக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வந்தது. அந்தச் செய்தியின் படி, சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு பிறகு, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, மீண்டும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம் மற்றும், கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷுடன் ஒரு படம் என இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.இத்தகைய தகவல்கள் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, “எனது அடுத்த படங்களைப் பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம். ஏதேனும் தகவல் இருந்தால் நானே முதல் ஆளாக அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News