டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அளித்த பேட்டியில் கூறிய சுவாரஸ்யமான விசயங்களில் ஒன்று:
“ராதிகா நடிக்கும் படம் ஒன்றை தயாரித்தேன். அதில் அவருக்கு கலெக்டர் கேரக்டர். அதற்காக அப்போதே, 18,000 ரூபாய் விலையில் புடவை வாங்கி வந்தேன். ஆனால் படத்தின் இயக்குனர், ‘முதலில் இந்த புடவையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வாருங்கள். 400 ரூபாய் புடவை போதும்’ என்றார்.
‘கலெக்டர் வேடமாயிற்றே..’ என்றேன்.
அதற்கு அவர், ‘திரையில் பார்க்கும்போது 18 ஆயிரம் ரூபாய் புடவை என்பது தெரிய போகிறதா.. வீணாக செலவு வைக்காதீர்கள்’ என்று மறுத்துவிட்டார்.
தயாரிப்பு செலவு அதிகரிக்கக் கூடாது என்று தயாரிப்பாளரையே அதட்டும் இயக்குநர் அவர். அவரை இப்போது கூட ஒரு படம் இயக்கித் தாருங்கள் என கேட்டு வருகிறேன். அவர் மறுக்கிறார்” என்றார் தாணு.
தாணு தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க மாட்டோமா என ஏராளமானோர் காத்திருக்க, இவர் அழைத்தும் மறுக்கும் அந்த இயக்குநர் யார்.. ஏன்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..