நடிப்பைவிட்டு விலக முடிவெடுத்த டில்லி கணேஷ்!: தடுத்த கே.பி.

நடிகர் டில்லி கணேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில், “மிக ஆசைப்பட்டு நடிக்க வந்தேன். நாடகம், சினிமா என நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் திடுமென பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

ஒரு கட்டத்தில பட வாய்ப்பு சுத்தமாக இல்லை. ஆகவே வேறு பிசினஸ் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டேன். அதற்கான முயற்சியிலும் இறங்கினேன். நடிப்பே வாழ்க்கை என இருந்த எனக்கு இந்த நிலையா என வருத்தமாகவும் இருந்தது. குடும்பத்தை ஓட்ட வேண்டுமே..

அந்த நிலையில், இயக்குநர் கே.பி.யிடம் இருந்து ஜாதி மல்லி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இத்தோடு நடிப்புக்கு முழுக்கு என நினைத்துத்தான் படப்பிடிப்புக்குப் போனேன்.

படப்பிடிப்பு இடைவேளையில் எனது எண்ணத்தை கே.பி.யிடம் சொன்னேன். அவர், “அவசரப்படாதே.. இனி உனக்கு வழக்கம்போல் நிறைய வாய்ப்புகள் வரும்” என்றார். அவர் சொன்ன நேரம்.. இன்று வரை வாய்ப்புகள் வந்தபடியே இருக்கின்றன” என்றார் நெகிழ்ச்சியுடன்.