எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் இப்படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியுள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.