கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனம். தோனி என்டெர்டெயின்மென்ட். இந்த நிறுவனம் சார்பில், ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்ற படம் உருவாகிறது. இதில் ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடியாக நடிக்கிறார்கள். நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்க, விஸ்வஜித் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில் முடிந்தது.
இந்நிலையில், படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து வெளியிட்டு உள்ளனர்.
டீசர் எப்படி?
படம் காதலை மையமாக வைத்த கலகலப்பான கதையம்சம் கொண்டதாக இருப்பதை உணர முடிகிறது. ஹரிஷ் கல்யாண் தாயாக நதியா நடித்துள்ளார். இறுதியில் வரும் யோகிபாபுவுக்கான காட்சி சர்ப்ரைஸ். படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.