50-வது படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ்!

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்க உள்ளார்.  இதில் வில்லியாக சோனியா அகர்வால் மற்று் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடிப்பதாகவும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. வட சென்னை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் மோதல் கதையம்சம் கொண்ட படம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் .