Tuesday, July 2, 2024

டீப்ஃபேக் வீடியோ சாதாரணமானது இல்லை’’ராஷ்மிகா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ டீப்ஃபேக் தொழில் நுற்பத்தில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  நிலையில், அடுத்து கேத்ரினா கைஃப், கஜோல், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘அனிமல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இதுபற்றி கேட்டபோது, “இது எல்லோருக்கும் நடக்கிறது. அமிதாப் பச்சன் எனக்கு ஆதரவாகப் பேசினார். பிறகு தென்னிந்திய சினிமாவில் இருந்தும் பலர் ஆதரவு கொடுத்தார்கள். அது என்னைப் பாதுகாப்பாக உணரவைத்தது. டீப்ஃபேக் வீடியோ என்பது சாதாரணமானது அல்ல என்பதை அனைத்துப் பெண்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏதாவது உங்களைப் பாதிக்கும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு நிலைபாட்டை எடுத்தால் மக்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்” என்றார்.

- Advertisement -

Read more

Local News