தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறது.
இந்தப் புதிய படத்தை பிரபல நடன இயக்குநரான பாபி ஆண்டனி இயக்குகிறார். இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலஷ்மி ஆகியோரும் நடிக்கின்றனர்.
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்), இயக்கம் – பாபி ஆண்டனி, ஒளிப்பதிவு – அகில் ஜார்ஜ், இசை – ரான் ஈதன் யோஹன், படத் தொகுப்பு – சரத்குமார், வசனம் – பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரி முத்து, கலை இயக்கம் – தினேஷ் குமார், உடைகள் வடிவமைப்பு – அம்ரிதா ராம் (ஆண்ட்ரியா ஜெர்மியா), நவாதேவி ராஜ்குமார், சண்டை இயக்கம் – G.N.முருகன், நிர்வாகத் தயாரிப்பாளர் – சாய், தயாரிப்பு நிர்வாகி – சக்கரதாள்வார்.G., மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. இந்தப் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், இயக்குநர் பாபி ஆண்டனி, நடிகை ஆண்ட்ரியா மற்றைய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்த கொண்டனர்.