செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் காதல் கொண்டேன் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மித்ரன் ஆர்.ஜவஹர்.
இவர் ஒரு பேட்டியில் காதல் கொண்டேன் திரைப்படத்தின் கதையை முதலில் பிரபு தேவாவிடம் தான் கூறினோம். அவருக்கு கதை பிடித்து விட்டது.
அப்போது நாங்கள் சின்ன வயது என்பதால் படம் எப்படி எடுப்பார்கள் என்ற சந்தேகம். அதனால் பிரபு தேவா பதில் சொல்ல அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு நடிகர் முரளி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பூஜை போடப்பட்டது. சூழ்நிலை காரணமாக படம் பாதியில் நின்று விட்டது. இந்த படத்தில் எதிர்பாராமல் வந்தவர் தான் தனுஷ் என்றார் இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர்.