அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..!

அப்பாவுக்கு பிடித்த படம் ’லவ் டுடே’உதயநிதி ஓபன் டாக்..!

நடிகர் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,யோகி பாபு ஆகியோர் நடித்த படம் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி படம் அப்போது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு பிரதீப் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘லவ் டுடே’.

உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டி ஒன்றில் எனது அப்பா எப்போதும் பிஸியாக இருப்பார். படங்கள் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது. ஆனால் சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ பார்த்து விட்டு படம் நல்ல பண்ணிருக்கார் என்று பாராட்டினார். அவர் யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்ட மாட்டார். அவருக்கு இந்த படம் ரொம்ப பிடித்த விட்டது என்றார்.

இளசுகளின் மனம் கவர்ந்த இந்த திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனாலும் குறுகிய காலத்தில்  40 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.