Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் உருவான ‘சூரரைப் போற்று’ படத்தை குணீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர்.

தற்போது சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இல்லாமல் வேறொரு நிறுவனத்துடன் சூர்யா கூட்டணி வைத்து ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை தயாரிக்க இருப்பதால் சிக்யா நிறுவனம் இந்த ரீமேக் படத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் 2 டி என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்துதான் இந்த சூரரைப் போற்று’ படத்தைத் தயாரித்தோம். சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் உரிமையில் எங்களுக்கும் பங்கு உண்டு. எனவே இந்தி ரீமேக்கையும் நாங்கள் இணைந்து உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால் 2D என்டர்டெயின்மென்ட் சிக்யாவின் அனுமதியின்றி அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் உரிமைகளை விற்றுள்ளது. மற்றும் எங்களுடன் ஏற்கெனவே போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறியதால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்று சிக்யா நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் உருவாக இடைக்காலத் தடை விதித்துள்ளனர். 

இதையடுத்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்தப் படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், “கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையைப் பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி நாங்கள் வழங்கிவிட்டோம்.

கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மெண்டிற்கு தனியாக 3 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்கில் எங்களுக்கு எதிரான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.

எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன..” என்று அவர் தெரிவித்தார்.

சுதா கொங்காராவின் இயக்கத்தில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யபட்டது.  

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட பிராந்திய மொழி படமாகவும் ‘சூரரைப் போற்று’ படம் சாதனை படைத்தது. IMDB தரவரிசையில் ‘தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ மற்றும் ‘தி காட்பாதர்’ படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை ‘சூரரைப் போற்று’ படம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News