நடிகர் அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். டுவிட்டரில் அவர் நாலரை கோடிக்கும் கூடுதலான பாலோயர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் 3.4 கோடி பேர் அவரை பின்தொடருகின்றனர்.
இந்நிலையில், பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே… உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள் என பதிவிட்டு உள்ளார்.
இதற்கு 6 லட்சம் பேர் லைக் தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த பதிவை கவனித்து சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட், கிழக்கு பெங்களூரு என்ற பெயரில் டுவிட்டரில் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.