சர்ச்சை ஜோடியின் நிஜக்கதை படமாகிறது! அவர்களே நடிக்கிறார்கள்!

 

தமிழில் எலந்த பழம் பாடல் மூலம் பிரபலமானவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. இவரது மகன்  நரேஷ் தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகர். இவரும், கன்னட நடிகை பவித்ரா லோகேஷை சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதாக திருமண புகைப்படமும் வைரலானது.

இருவரும்  இந்த திருமணம் ஒரு படத்தில் இடம்பெறும் காட்சி என்றும் பேசினர்.

நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர். இவருக்கு 63 வயது ஆகிறது. பவித்ரா லோகேசும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு 44 வயது.

நரேசுக்கு ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன என்றும் அதை அபகரிக்கும் திட்டத்தோடு அவரை பவித்ரா மணந்துள்ளார் என்றும் பவித்ராவின் முதல் கணவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் நரேஷ் –  பவித்ராவின் காதல் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘மல்லி பெல்லி’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் அவர்களே நடிக்கிறார்கள். எம்.எஸ்.ராஜு டைரக்டு செய்கிறார்.

தற்போது படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் பவித்ரா வெட்கத்தோடு கோலமிட, நரேஷ் முழங்காலில் மண்டியிட்டு சிரித்தபடி ரசிப்பது போன்ற காட்சி உள்ளது. இதில் ஜெயசுதா, சரத்பாபு, அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.