Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

இதுவரையிலும் சொல்லப்படாத கதையில் உருவாகும் ‘கம்பெனி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களால் உருவான பல திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதற்குக் காரணம், அப்படங்களின் புதுமை மற்றும் வித்தியாசமான கதைக்களமே. அந்த வகையில், இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக் களத்தோடு உருவாகியுள்ள படம் ‘கம்பெனி’.

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீமகானந்தா சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன் மிகப் பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கராத்தே வெங்கடேஷ், ரமா, சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஜூபின், செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத் தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார். மிராக்கல் மைக்கேல் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். எம்.ஜி.பஞ்சாட்சரம் இணை தயாரிப்பு பணியை கவனிக்கிறார். தங்கராஜ் எழுதி, இயக்கியிருக்கிறார்.

பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள். அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத பஸ் பாடி பில்டிங் தொழிற்சாலையையும், அதன் பணிகளையும் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவே இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளாராம். அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு ரசிக்கும்படியும் இருக்கும் என்று உறுதியளிக்கிறது இயக்குநர் டீம்.

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார் என்று இயக்குநர் தங்கராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

- Advertisement -

Read more

Local News