கும்கி, மைனா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ திரைப்படம் இன்று வெளியாக இருக்கிறது. இதன் செய்தியாளர்கள் காட்சி நேற்று திரையிடப்பட்டது.
மூன்று இளைஞர்களால் பாலியல் வன்புறவு செய்யப்படும் சிறுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தப் படத்தின் முடிவில் ‘உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து – இயேசு என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.
இது குறித்து சில செய்தியாளர்கள் இயக்குநர் பிரபு சாலமனிடம் கேள்வி எழுப்பினர். அவர்கள், “அனைவரும் விரும்பும்படியாக ஒரு சிறந்த படத்தை அளித்துள்ளீர்கள். ஆனால் இறுதியில் மதப் பிரச்சாரம் ஏன்.. அனைத்து மதங்களும்தானே அன்பை போதிக்கின்றன… குறிப்பிட்ட மத பிரச்சாரம் தேவையா” என்றனர்.
இதற்கு பிரபு சாலமன் விளக்கம் அளித்தார். மீண்டும் கேள்விகள் தொடர்ந்தன. இறுதியில், ‘ அந்த வாசகம் உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
ஒரு வழியாக விவாதம் முடிவுக்கு வந்தது.