Wednesday, April 10, 2024

’’சினிமா புதிய கலாசாரத்தை  அறிமுகப்படுத்துகிறது ’’ விஜய் சேதுபதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் 54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நேற்று (நவ.20) தொடங்கியது. இதன் தொடக்க விழா கோவா தலைநகர் பனாஜியில் உள்ள ஷ்யாம பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ என்ற மவுன மொழி படத்துக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், ‘இந்த விழாவில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் சினிமா ஒரு அற்புதான மொழி. அது பார்வையாளர்களை வேறொரு உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது. அதன் மூலம் அவர்கள் புதிய அனுபவத்தை பெறுகின்றனர்.

சினிமா புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்துகிறது. எமோஷன்களை வெளிப்படுத்தி சக மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என சொல்லிக்கொடுக்கிறது. ஆகவே தான் சினிமா ஒரு அற்புதமான ஊடகம். நானும் இதில் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். குறிப்பாக ஒரு நடிகன் என்ற முறையில் ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்கிறேன். நான் இதை அனுபவிக்கிறேன். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

 விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் பிளாக் காமெடியை அடிப்படையாகக் கொண்ட உருவாக்கப்பட்டது. மவுன மொழி படமான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதல் மவுன மொழித் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News