‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்!

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களை அளித்த எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள, “மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது…” என்கிற வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் த்ரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.