Wednesday, November 20, 2024

நாகேஷ் திறமையானவர்தான்… ஆனால்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் பற்றி சொல்ல அறிமுகம் தேவையில்லை. குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமின்றி நாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பிற்காலத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பாலச்சந்தரின் மிக நெருங்கிய நண்பரான,  நாகேஷ், அவரது திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் சிறு விரிசல் உருவானது.  ஆனாலும் மீண்டும் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம்  இருவரும் இணைந்தனர்.

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நாகேஷ் குறித்து சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், “நாகேஷிற்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கமும் மதுப்பழக்கமும் இருந்தது. இதனால் 1970களில் ஒரு முறை உடல் நிலை பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சைக்குப் பிறகு நாகேஷ் உடல் நலம் தேறி மீண்டு வந்தார்.

நாகேஷினுடைய அற்புதமான நடிப்பும், ஞாபக சக்தியும் அவருடைய மிகப்பெரிய பிளஸ்கள். அவருடைய பலவீனம் என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் அவர் மதுவுக்கு பெரிதளவில் அடிமையானார். அதன் காரணமாக பல பட வாய்ப்புகளை அவர் இழந்தார். ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் நாகேஷுக்கும் இடையே சில பிரச்சனைகள் வருவதற்கும் அவரின் மது பழக்கம் காரணமாக இருந்தது. மேலும் இது போன்ற மதுப்பழக்கத்திற்கு தற்போதுள்ள நடிகர்கள் அடிமையாகக்கூடாது” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை தெரிந்துகொள்ள…

https://www.youtube.com/channel/UC5Va8SDMp-yviytKMh9YaNQ

- Advertisement -

Read more

Local News