கடந்த 2 ஆண்டுகளாக நடிகை அமலா பால் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்னும் பாடகரை காதலித்து வருவதாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் அமலா பாலுக்கும் பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி சில புகைப்படங்கள் இன்ஸ்ட்டாகிராமில் வெளியாகின.
அமலா பாலின் காதலர் என்று சொல்லப்பட்ட பாடகர் பவனீந்தர் சிங்தான் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அதனை வெளியிட்டிருந்தார். சில நிமிடங்களில் அந்தச் செய்தியும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

உடனேயே அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டதாகவே செய்திகளும் எழுதப்பட்டன.
ஆனால் இந்தப் புகைப்படங்கள் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்றும், தனக்கு திருமணம் நடக்கவில்லை என்றும் அவருடைய மேனேஜர் மூலமாக மறுப்பு தெரிவித்தார் நடிகை அமலா பால்.

இருந்தாலும் இது தொடர்பாக பாடகர் பவ்னிந்தர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா பால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நடிகை அமலா பாலின் புகைப்படங்களை இனிமேல் சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அமலா பாலின் மனுவுக்கு வரும் டிசம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் பவ்னிந்தர் சிங்க்கு உத்தரவிட்டார்.