மகாராஜா, போர் தொழில், ஆர் யூ ஓகே பேபி உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர நடிகையாக நடித்தவர் முல்லை அரசி. ‘கொட்டுக்காளி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் முல்லை அரசி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகிறார்கள். கதாநாயகியாக சேத்தன், ‘பருத்திவீரன்’ சரவணன் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
