நடிகை கார்த்திகா – ரோகித் மேனன் திருமணம் பிரபலங்கள் வாழ்த்து.

தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினி, கமல், சிரஞ்சீவி உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 1991-ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு கார்த்திகா, துளசி என்ற 2 மகள்கள். இருவரும் சினிமாவில் நடித்தனர். எந்த படங்களும் கை கொடுக்காததால் இருவருமே நடிப்பிலிருந்து விலகி தந்தையின் பிசினஸை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கார்த்திகாவுக்கு, ரோகித் மேனன் என்பவருடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்தப் புகைப்படங்களை கார்த்திகா வெளியிட்டிருந்தார். இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சிரஞ்சீவி, மேனகா உட்பட தமிழ், மலையாள திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.