தமிழ் சினிமாவில் ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் விஜய்யுடன் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். தற்போது இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இந்தப் படத்தில் ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இதை பார்த்து நெகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தப் படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.