Wednesday, April 10, 2024

பிரிங்கா  உபேந்திராவின் ’கேப்சர்’ விரைவில் ரிலீஸ்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோஹித் ஹெச் இயக்கதில்  கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, நடித்துள்ள படம் ’கேப்சர் ’. சிவராஜ்குமாரின் டகரு  மூலம் புகழ் பெற்ற மன்விதா காமத், மாஸ்டர்  கிருஷ்ணராஜ் மற்றும்  பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  படத்தின் ஒளிப்பதிவு பாண்டிகுமார் கவனிக்கிறார்.  உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான ஒரு படமாக உருவாகியுள்ளது.

உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்று கேப்சர்.  இயக்குனர் லோஹித்.ஹெச் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்

. ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.

இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் மிகுந்த ரத்தக்காயங்களுடன் காணப்படும் ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிரிபார்க்கலாம்.

 

- Advertisement -

Read more

Local News