தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக அனைவருக்கும் பிடிக்கும் நபராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை தாண்டி பாலிவுட் ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. ஷாரூக்கானின் ஜவான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பை கண்டு வியந்து விட்டாராம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
’நானும் ரெளடி தான்’ படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்தாராம் ஜான்வி கபூர். ‘நான் உங்கள் ரசிகை’ இந்த படத்தை 100 முறைக்கும் மேல் பார்த்து விட்டேன். உங்கள் நடிப்பு என்னை பிரமிக்க வைத்துவிட்டது. உங்கள் படத்தில் என்னை நடிக்க வைக்க விரும்பினால் என்னை அழையுங்கள். நான் நடிக்க தயாராக இருக்கிறேன் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட விஜய் சேதுபதி ஆச்சரியப்பட்டாராம். இந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் ஜான்வி கபூர் கூறியிருந்தார்.