Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், MKRP புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் பிஸ்கோத்’.

ந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும்  நடிக்கிறார்கள்.

மேலும், ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.

இசை – ரதன், ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – ராஜ்குமார், சண்டை இயக்கம் – ஹரி, நடன இயக்கம் – சதீஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு – ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் – ஆர்.கண்ணன்.

ஏற்கெனவே இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், சந்தானத்தை கதாநாயகனாக வைத்து கண்ணன் படம் இயக்குவது இதுவே முதல் முறை.

பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார்.

சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரை மணி நேரம் இடம் பெறுகின்றன.

அந்தக் காட்சிகளுக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் சந்தானம் ராஜா வேடத்தில் நடித்து அசத்தினார்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது. அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.

இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார்.

இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன. காட்சிகள் பெயிண்டிங்கில் போல் வந்துள்ளன. அந்தக் கால பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ’96’ படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக் கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம் பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சம காலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020-க்கான காட்சிகள் அமைந்திருக்கும்.

இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.

சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வைக்கும் வகையில் பெரிய மன நிம்மதி அளிக்கும்படியான கலகலப்பான காமெடி படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும்.

இந்த படத்திற்காக சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. இப்படத்தில் இடம் பெறும் களரிச் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷிடம் களரி கற்றுக் கொண்ட பிறகுதான் நடித்தார்.

சௌகார் ஜானகி ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருகிறார். நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஏற்கெனவே ‘A1’ படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி ஒரு நாயகியாகவும், மிஸ் கர்நாடகா’ விருது பெற்ற ஸ்வாதி முப்பாலா இன்னொரு நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

அது மட்டுமல்ல ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார்கள்…” என்றார்.

இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர்.ரவீந்திரன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

- Advertisement -

Read more

Local News