தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரெபா மோனிகா ஜான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகில் நடித்துள்ள இவர், 2016-ஆம் ஆண்டு ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்னும் மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் திரையுலகில், 2018-ஆம் ஆண்டு வெளியான ஜெய் நடித்த ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், விஜய்யுடன் பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2019-ஆம் ஆண்டில், கன்னடத் திரைப்படத்திலும் அறிமுகமானார். தற்போது, தெலுங்கு இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்கும் மேட் ஸ்கொயர் படத்தில், சுவாதி ரெட்டி என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், ரெபாவின் புதிய திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஹுசைன் ஷா கிரண் இயக்க, கதாநாயகனாக ஸ்ரீ விஷ்ணு நடிக்கிறார். இந்த படத்திற்கு மிருத்யுஞ்சய் என்று பெயரிடப்பட்டுள்ளது.