Saturday, September 21, 2024

பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரும் அக்டோபர் 9-ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் ஒளிபரப்பாக இருக்கிறது.

எப்போதும் 14 போட்டியாளர்கள்தான் இதில் பங்கேற்பாளர்கள். ஆனால், இந்த 6-வது சீஸனில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறதாம். மக்கள் போட்டியாளர்கள் என்ற கேட்டகிரியில் மேலும் 6 சாமானியமானவர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்களாம்.

மேலும் விஜய் டிவியில் தினமும்1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் இந்த பிக்பாஸ்-6 சீஸன் நிகழ்ச்சியைப் பார்க்கலாமாம்.

இந்த சீஸனில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவருமே இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி நடிகை விசித்ரா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், பாடகி ராஜலட்சுமி, ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தோழிகளாக நடித்த ரச்சிதா, ‘மைனா’ நந்தினி, டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து, ஆயிஷா, வி.ஜே.மகேஸ்வரி, இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன், வி.ஜே.கதிரவன், கானா பாடகர் வசந்த், ராம்சந்தர், நடன  இயக்குநரும், நடிகையுமான மெட்டி ஒலி சாந்தி, திருநங்கை சிவின் கணேசன், சிங்கப்பூர் தொகுப்பாளினி நிவாஷினி, மாடலிங் அழகியான நீது, இவர்களுடன் விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்று இந்தப் பட்டியலில் பலதரப்பட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் கடைசி நேரத்தில் யாராவது இல்லாமலும் இருக்கலாம். சென்ற முறை விஜய் டிவியே பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல்களை லீக் செய்து பிக்பாஸ் பற்றிய பரபரப்பை உண்டு செய்தது. ஆனால் இந்த முறை எதையும் செய்யாமல் அமுக்கமாக இருந்து வருகிறது.

எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் இது தொடர்பான பிரிவியூ வீடியோக்களை விஜய் டிவி வெளியும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வழக்கம்போல இந்த பிக்பாஸ்-6 சீஸனையும் உலக நாயகன் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார். கமலின் புரோமோ வீடியோக்கள் தற்போது தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News