இந்தப் படத்தில் நாயகர்களாக இந்திரன், சசி சரத், அஸ்வின் கார்த்திக், நாயகியாக ஸ்ரீநிதி நடிக்கின்றனர். மேலும் ஆர்.வி.உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, பாத்திமா, நாட்டுப்புற கலைஞர் மன்னை ஸ்ரீமூர்த்தி, சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்ன், ஜேசுதாஸ், ‘ஈரமான ரோஜாவே’ சிவா, நாஞ்சில் சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மோகன ராமன், இசை – எஸ்.ஷாந்தகுமார், பாடல்கள் – டாக்டர்.கிருதியா, ஜான் தன்ராஜ், தொல்காப்பியன், தயாரிப்பு – எம்.பி. முகமது இப்ராகீம், எஸ்.எம்.குமாரசிவம், ஆர்.அப்துல் அஜீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விவேக பாரதி.
இயக்குநர் விவேக பாரதி வெங்கட் பிரபு கதாநாயகனாக நடித்த ‘வசந்தம் வந்தாச்சு’, மாஸ்டர் மகேந்திரன் நடித்த ‘என்றுமே ஆனந்தம்’ போன்ற படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
கொரோனா பேரிடர் காலத்தில் கடை நிலை மருத்துவ ஊழியர்கள், திரைப்பட தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள் மற்றும் வாட்ச்மேன் வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, “இப்படம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பக்கத்தை அப்படியே சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார்.
மேலும் இந்த விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், வ.கௌதமன், சுப்ரமணியம் சிவா, யுரேகா, ஷரவண சக்தி மற்றும் தொழிலதிபர் சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.





