‘லெப்டி மேனுவல் கிரியோசன்’ நிறுவன தயாரிப்பில், ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிகினிங்’.
ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’- அதாவது ஒரே நேரத்தில்.. இரு படங்கள் திரையில் ஓடும் வகையில் – இப்படம் உருவாகியுள்ளது.
திரையின் இடது பக்கம் ஒரு கதையின் காட்சிகளும், வலது பக்கம் மற்றொரு கதையின் காட்சிகளும் ஓடும்.
அதே நேரம், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள்.
வித்தியாசமான இந்த திரைப்படத்தை இயக்குநர் என்.லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் உலகமெங்கும் வெளியிடுகிறார்.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், விரைல் படம் வெளியாக உள்ளது.