Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பாலு கேட்காமலேயே கமல் செய்த உதவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த்திரையுலகின் மிக முக்கிய இயக்குநர் பாலு மகேந்திரா. இவர் கமலுடன் இணைந்து உருவாக்கிய, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் இன்றும் பிரபலமானவை.

பாலுமகேந்திரா அந்த காலகட்டத்தில் மறுபடியும் என்ற படத்தை உருவாக்கிய போது, பண நெருக்கடி ஏற்பட்டது.  பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக கமலிடம் நேரில் சென்றார். பணம் கேட்க தயக்கப்பட்டு திரையுலகம் பற்றி பொதுவாக பேசிக்கொண்டு இருந்தார். கமலும்  அப்படித்தான்.

சில நிமிடங்களில் வீட்டுக்குள் சென்று பிறகு வந்த கமல், பெரும் தொகையைக் கொடுத்து, தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் இயக்க முடியுமா.. அதற்கான அட்வான்ஸ்தான் இது என்று கொடுத்தார்.

அப்படி உருவான படம்தான் சதி லீலாவதி.

கேட்காமலேயே முகக்குறிப்பறிந்து நண்பருக்கு  உதவி செய்த கமல் பாராட்டுக்குரிய மனிதர்தான்.

- Advertisement -

Read more

Local News