Saturday, July 27, 2024

மோகன்ஜி – செல்வராகவனின் ‘பகாசூரன்’ மிரட்டல் மேக்கிங் வீடியோ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் முதன் முதலாக நாயகனாக நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘திரவுபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News