Thursday, April 11, 2024

விமர்சனம்: பகாசுரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பகாசுரன், இளம்பெண்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் குற்றங்களை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது.

படம் ஆரம்பித்தபோதே, செல்வராகவன் கொடூரமாக ஒரு கொலையைச் செய்கிறார். அடுத்தடுத்து இரு கொலைகள். இன்னொரு பக்கம், ஆன்லைன் விபசாரம் குறித்து விசாரிக்கிறார் தனியார் துப்பறிவாளரான நட்டி.

இருவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்களா.. இருவரது பின்னணி என்ன என்பதை சுவாரஸ்யமாக அளித்துள்ளார் , இயக்குநர் மோகன் ஜி.

செல்வராகவன், கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். மகளிடம் காட்டும் அன்பு, வில்லன்களை கொலை செய்யும்போது கொடூரம்.. இறைவனை வணங்கும்போது சாந்தம்.. என முகத்தில் வர்ணஜாலம் காண்பித்து இருக்கிறார்.

நட்டி வழக்கம்போல், தனது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அதே போல ராதாரவி, கூல் சுரேஷ் என அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

சாம் சி.எஸ். இசை அதிரவைக்கிறது. சிறப்பு.

ஒளிப்பதிவும் அற்புதம்.

செல்போன் செயலிகள் சில, எப்படி சமுதாயத்தை பாதிக்கிறது… இதனால் இளைஞர்கள் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை மிகச் சிறப்பாக – சுவாரஸ்யமாக அளித்து உள்ளார் இயக்குநர் மோகன் ஜி.

- Advertisement -

Read more

Local News