‘அமரன்’ திரைப்படத்துக்குப் பிறகு, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘மதராஸி’ திரைப்படம் 1965களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிரித்திவி ராஜ், குரு சோமசுந்தரம், பஷில் ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது, இந்தப் படத்தில் பாப்ரி கோஸ் என்பவரும் இணைந்துள்ளார்.
பாப்ரி கோஸ், ஏற்கனவே விஜய் நடித்த ‘பைரவா’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, சிவகார்த்திகேயனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.