அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தியின் அயோத்தி படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்துக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் கதை எழுதி இருக்கிறார். இந்நிலையில் எழுத்தாளர் , மாதவராஜ் இது தன்னுடைய கதை என்று தெரிவித்தார். மூலக்கதை எழுதிய மாதவராஜுக்கு சேர வேண்டியதை கொடுக்க வேண்டும் எனவும் எழுத்தாளர் நரனும் குறிப்பிட்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தற்போது சசிகுமார், தெரிவித்திருக்கிறார்.
தஞ்சாவூரில் நடந்துவரும் நந்தன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்த சசிக்குமார் அயோத்தி படத்தை திரையரங்கில் மக்களோடு அமர்ந்து பார்த்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விஷயம் இதில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள செய்தியைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம்.
எல்லோரது வாழ்க்கையிலும் நடக்கும் கதைதான் இது
தமிழர்களாகிய நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறோம். இந்தக் கதையானது எல்லோரது வாழ்க்கையிலும் நடக்க்கூடிய ரு விஷயம்தான். அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை அடக்கம் செய்வதை சமூக சேவையாக செய்துவருகிறார். அதேபோல் மதுரையிலும் ஒருவர் அதனை சமூக சேவையாக செய்துவருகிறார். எல்லோரும் வாழ்க்கையில் கடந்து வந்த விஷயம்தான் இது” என்றார்.