ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக ஏழு ஆண்டுகள் வரை விளையாடிவர். அப்போது தெலுங்கு சினிமா பாடல்களுக்காக ரீல்ஸ்-களைப் போட்டு தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்.அந்த அணியை விட்டு விலகிய பின்பும் தெலுங்கு சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. அவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தார்கள். இப்போது நிதின் நாயகனாக நடிக்கும் ‘ராபின்ஹுட்’ தெலுங்குப் படத்தில் டேவிட் வார்னர் அறிமுகமாக உள்ளார்.
