புஷ்பா 2’ திரைப்படத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகராக உயர்ந்தவர் அல்லு அர்ஜுன். அவருடைய அடுத்த திரைப்படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல தகவல்கள் சமூக வலைதளங்களில் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவியுள்ளன. சமீபத்தில், அவர் தமிழ் இயக்குநரான அட்லியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என உறுதியான தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
இந்த தகவல் இன்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உறுதி செய்த பிறகு அட்லியும் அல்லு அர்ஜுனும் சேர்ந்து அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு புகழ்பெற்ற விஎப்எக்ஸ் நிறுவனம் லோலா வல்லுனர்களுடன் இருவரும் ஆலோசனை நடத்திய காட்சிகள், படத்தின் கதையை கேட்டு அவர்கள் அளித்த பரிந்துரைகள், அல்லு அர்ஜுனின் ஸ்க்ரீன் டெஸ்ட் காட்சிகள் ஆகியவை அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘அட்லி – அல்லு அர்ஜுன் – அமெரிக்கா’ என்ற இந்த கூட்டணி ஒரு உலகத் தரத்திலான ஆக்ஷன் திரைப்படத்தை வழங்கப்போகிறது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இப்படத்தின் கதை சாதாரணமாக இருக்காது, அது கண்முன்னே கற்பனைக்கதையை கடந்துபோகும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.