சென்னை கோடம்பாக்கத்தில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் இல்ல நிகழ்ச்சியில், நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஷால்,விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும். அவர் செய்தியாளர்களை சந்தித்தால்தான் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். சமூக சேவை செய்யும் மனதில் தைரியமும், ஆர்வமும் இருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் அரசியலுக்கு வரலாம்.
எல்லா பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆனால், நீங்கள் மும்மொழியை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அதைப் பள்ளிகள் அனைத்திலும் ஒழிக்க வேண்டும். மனிதனின் வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் கட்டாயமாக திணிக்க முடியாது. அது வெற்றியடையாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி.பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துகள். நன்றாக படிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.மேலும், சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் போன்று மேலே கை காட்டி, “நல்லதா நடக்கும்” என்று பதிலளித்தார்.