`பாரத்’:  அனுராக் காஷ்யப் அதிர்ச்சி யூகம்!

‘கென்னடி’ உள்ளிட்ட படங்களை யும்,  இந்தி படங்களையும் இயக்கி, பிரபல இயக்குநராக வலம் வருவபர் அனுராக் காஷ்யப்.

‘இமைக்கா நொடிகள்’ உள்ட்ட படங்களில் நடித்த இவர், தற்போது விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்  அவர், இந்தியா முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள ‘இந்தியா – பாரத்’ சர்ச்சையைக் குறித்து பேசியிருக்கிறார்.

“‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்பதாக அரசு ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டு மாற்றிவிடலாம். ஆனால், மக்கள் தங்களின் பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி ஆவணங்கள் எனப் பல ஆவணங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவேண்டி இயிருக்கும். இதற்காக அரசு, மக்களின் நான்கு வருட வரிப்பணத்தைச் செலவிடுவார்கள். இதனால், மீண்டும் மக்கள்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குத்தான் இது பெரிய வேலையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.