ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கியிருக்கிறது.
கடைசியாக ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கின்போது ஒரு தொழிலாளருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதோடு ரஜினிக்கும் திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போக அந்தப் படப்பிடிப்பை கேன்ஸல் செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இதன் பின்பு 4 மாதங்கள் கழித்து மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை சென்னையில் துவக்கியிருக்கிறா்கள். சென்னையில் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் இதற்கான செட் போடப்பட்டு இதில் படப்பிடிப்புகள் துவங்கியிருக்கிறதாம்.
இதில் ரஜினி இல்லாத காட்சிகளை இப்போது படமாக்கி வருகிறார்கள். ரஜினி எப்போது ஷூட்டிங்கிற்கு வருவார் என்பதையும் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபுவும் நடிக்கவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெகபதி பாபு ஏற்கெனவே பல தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதனால் இந்த ‘அண்ணாத்த’ படத்திலும் அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் நடிப்பார் என்கிறார்கள்.