Me Too பிரச்சினைகள் உலகளாவிய அளவுக்குப் பரவி இந்திய திரைப்படத் துறையிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழச் சினிமாவிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இருந்தும் இன்னும் அந்த மீ டூ கொடுமை நீடித்து வருவதாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தின் தோழி ஒருவருக்கு இது போன்ற அழைப்பு வந்ததாக அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
திரை வாய்ப்புக்காக குறிப்பிட்ட ஒருவரிடம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் அனிதாவின் தோழியிடம் இன்ஸ்டா சாட்டில் தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்த பெண்ணோ முடியாது.. என்று சொல்ல… “இது உண்மைதான். விஜய் டிவில ஈஸியா சான்ஸ் கிடைக்காதும்மா.. ஒரு நாள் யோசி. ஒத்துக்கிட்டால் பெரிய லெவலில் வர முடியும்..” என்று அந்த நபர் பதில் கூறியிருக்கிறார். உடனேயே அந்தத் தோழி “நீங்க வேறு ஆளை பாருங்கள்” என்று சொல்லிவிட்டு அவரை பிளாக் செய்துவிட்டாராம்.

அந்த பெண் தன்னிடம் தவறாக பேசிய நபரின் சாட்டிங்கை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து தன் தோழி அனிதா சம்பத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அனிதா அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து “இது போன்ற ஆட்களை நம்பாதீர்கள்…” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும், கைதுகள் நடந்தேறியும், அவமானங்கள் தொடர்ந்தும், மீடியாக்களின் பகிரங்கப்படுத்துதல் நடந்தும் மீ டூ இன்னும் தொடர்கிறது என்றால் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.